இஸ்ரேல் காஸாவின் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அங்கிருந்து வெளியேற விரும்பும் யூதர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.இஸ்ரேல் தொலைக்காட்சி அலைவரிசையான சானல்-2 நடத்திய கருத்துக்கணிப்பில் இது தெரியவந்துள்ளது.
ஒரு வாய்ப்புக் கிடைத்தால் இஸ்ரேலை விட்டு வெளியேறிவிடுவோம் என்று 30 சதவீத யூதர்களும் தெரிவித்துள்ளனர்.14 சதவீதம் பேருக்கு என்னச் செய்யவேண்டும் என்பது தெரியவில்லை. 56 சதவீதம் பேர் இஸ்ரேலை விட்டு வெளியேறமாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்பு இஸ்ரேலை விட்டு வெளியேறி லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குடியேறியவர்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பிலும் போர் மூலம் உருவான பாதுகாப்பு அச்சுறுத்தலும், வாழ்க்கை செலவையும் காரணமாக தெரிவித்தனர்.