Breaking
Thu. Nov 14th, 2024

அமெ­ரிக்க ஜனா­தி­ப­திக்­கான வேட்­பாளர் தெரிவின் முதற்­கட்ட தெரிவில் டொனால்ட் ட்ரம்பை தோற்­க­டித்து  டெட் குருஸ் வெற்றி பெற்­றுள்ளார்.

அமெ­ரிக்­காவின் அயோவா பகு­தியில் நேற்று முன்­தினம் வேட்­பாளர் தெரிவின் முதற்­கட்ட வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டது.

இதில் குருஸ் 27.7 சத­வீத வாக்­கு­க­ளையும், டிரம்ப் 24.3 சத­வீத வாக்­கு­க­ளையும் பெற்­றனர். அவர்­க­ளுக்கு அடுத்த நிலையில், மார்கோ ருபியோ 23.1 சத­வீத வாக்­குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்­துள்ளார்.

இதனால் டெட் குரூஸை குடி­ய­ரசுக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக அறி­விப்­பதில் எவ்­வித சிக்­கலும் இல்லை என்று கரு­தப்­ப­டு­கி­றது. முன்­ன­தாக முஸ்­லிம்கள் அமெ­ரிக்­காவில் நுழை­வது குறித்து ட்ரம்ப் சர்ச்­சைக்­கு­ரிய கருத்து தெரி­வித்­ததே அவ­ரு­டைய இந்த தோல்­விக்கு காரணம் என்று கருத்­துகள் வெளி­யா­கி­யுள்­ளன.

இந்த முடி­வு­களை வர­வேற்­ப­தாக ட்ரம்ப் கூறி­யுள்ளார். ஜன­நா­யக கட்­சியை பொறுத்­த­வரை கிளாரி கிளிண்­டனும், பெர்னி சண்டெர் சிறிய அளவு வித்­தி­யா­ச­மான   வாக்­கு­களை பெற்­றுள்­ளனர்.

ஹிலாரி கிளிண்டன் 50.1 சத­வீத வாக்­கு­க­ளையும், பெர்னி 49.3 சத­வீத வாக்­கு­க­ளையும் பெற்­றுள்­ளனர்.

அமெ­ரிக்­காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் புதிய ஜனா­தி­ப­தியை தெரிவு செய்­வ­தற்­கான தேர்தல் நடக்க உள்­ளது. இந்­நி­லையில் ஜனா­தி­பதி வேட்
பா­ளரை தெரிவு செய்ய இரு கட்­சி­க­ளிலும் விரைவில் உட்­கட்சித் தேர்தல் நடை­பெற உள்­ளது.

முன்­ன­தாக கடந்த வாரம் வெளி­யி­டப்­பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில் டொனால்ட் ட்ரம்­புக்கு சாத­க­மாக இருப்­ப­தா­கவும், அவ­ருக்கு 34 சத­வீதம் பேரின் ஆத­ரவு உள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

டெட் குருசுக்கு 20 சதவீதம் பேரின் ஆதரவு கிடைக்கும் என்றும் அந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

By

Related Post