Breaking
Mon. Dec 23rd, 2024

ஐக்­கிய நாடு­களின் மனித உரிமைகள் ஆணை­யாளர் நாயகம் செயிட் அல் ஹூசைன் உத்­தி­யோ­கப்­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு இன்று காலை 8.25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

டுபாயிலிருந்து வந்த ஈகே650 என்ற விமானத்தில் வந்த செய்ட் அல் ஹூசைனுடன் 6 பிரதிநிதிகளும் வருகை தந்தனர்.

 நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள செயிட் அல் ஹூசைன் எதிர்­வரும் 9 ஆம்­தி­கதி வரை நாட்டில் தங்­கி­யி­ருப்­ப­துடன் அரச தரப்பு, எதிர்த்­த­ரப்பு, சிவில் சமூ­கப்­பி­ர­தி­நி­திகள் உள்­ளிட்­டோரை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்­ள­துடன் வட­மா­கா­ணத்­திற்கும் விஜயம் செய்­ய­வுள்ளார்.

அத்­துடன் இன்று சனிக்­கி­ழமை யாழ்ப்­பா­ணத்­திற்­கான விஜ­யத்தை மேற்­கொள்­ள­வுள்ள ஐ.நா. மனித உரி­மை­யாளர் செயிட் அல் ஹூசைன் அங்கு வட­மா­காண முத­ல­மைச்­சரை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்­ள­துடன், யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ரையும் சந்­தித்து கலந்­து­ரை­யா­ட­வுள்ளார்.

இலங்கை அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக கூறப்­படும் உள்­ளக விசா­ரணைப் பொறி­முறை செயற்­பாட்டில் வட­மா­கா­ணத்தின் பங்­க­ளிப்பு முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாக இருக்­கு­மென கரு­தப்­ப­டு­கின்ற நிலை­யி­லேயே செயிட் அல் ஹூசைன் வட­மா­காண முதல்­வ­ருடன் பேச்­சு­வார்த்தை நடத்­த­வி­ருக்­கின்றார்.

விசே­ட­மாக விசா­ரணை பொறி­மு­றையின் போது பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்கும் செயற்­பாடு எவ்­வாறு அமையும் என்­பது குறித்து இதன் போது கலந்­து­ரை­யா­டப்­ப­டு­மென எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இதே­வேளை இன்று மாலை கொழும்பு திரும்­ப­வுள்ள செயிட் அல் ஹூசைன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர ஆகி­யோரை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார்.

By

Related Post