Breaking
Sat. Sep 21st, 2024
இலங்கை அரசாங்கத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் நடவடிக்கைகள் மீண்டும் துரிதமாக இடம்பெறுவதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் எம்.என்.ரணசிங்க தெரிவித்தார். 750 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றும், விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட பின்னரே பிரஜாவுரிமை வழங்கப்படும் என்றும் அவர் ஊடகங்களுக்கு கூறினார்.
விண்ணப்பித்தவர்களில் 3500 பேருக்கு இதுவரை இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது என்றும் மேலும் 750 பேருக்கு வழங்குவதற்கான அனுமதியை அரசாங்கம் அங்கீகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
போரினால் இடைநிறுத்தி வைக்கப்பட்ட இரட்டைப் பிரஜாவுரிமை வழங்குவதற்கான அனுமதியை கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமைச்சரவை அங்கீகரித்தது. அதேவேளை இரட்டை பிராஜாவுரிமை பெற்றவர்களில் அதிகமானோர் சிங்கள மக்கள் என்றும் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களில் சொற்பமானோரே இரட்டை பிரஜாவுரிமையை பெற்றுள்ளதாகவும் அமைச்சரவைத் தகவல்கள் கூறுகின்றன.

By

Related Post