செயிட் அல் ஹூசைன் இன்று (8) கண்டிக்கு விஜயம் செய்யவுள்ளார்.
குறித்த விஜயத்தின்போது அவர் கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்குச் செல்லவுள்ளதோடு, மல்வத்து மற்றும் அஸ்கிரிய மஹாநாயக்க தேரர்களையும் சந்திக்கவுள்ளார்.
அதனையடுத்து,ஐ.நா ஆணையாளர் கொழும்பிற்கு விஜயம் செய்து பாதுகாப்பு செயலாளர் மற்றும் முப்படைகளின் தளபதிகள் ஆகியோரை பாதுகாப்பு அமைச்சில் சந்தித்துப் பேசவுள்ளார். பின்னர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அங்கத்தர்களுடன் மதிய விருந்தில் கலந்துகொண்டு மனித உரிமை விவகாரங்கள் குறித்து ஆணைக்குழுவினருடன் கலந்துரையாடவுள்ளார்.
அதனையடுத்து இன்று மாலை இலங்கைக்கான ஐ.நா அலுவலக வளாகத்தில் சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் தேசிய ஆலோசனை செயலணி உறுப்பினர்களை சந்திக்கவுள்ளதோடு, அதனையடுத்து வெளிவிவகார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இதேவேளை, ஐ.நா ஆணையாளர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்திக்கவுள்ளதாகவும் இன்று இரவு அல்லது நாளை இந்த சந்திப்பு இடம்பெறுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.