Breaking
Fri. Nov 15th, 2024

இலங்­கைக்கு நான்கு நாள் உத்­தி­யோகபூர்வ விஜயம் மேற்­கொண்டு வரு­கை­தந்­துள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் ஜனா­தி­பதி, பிர­தமர், எதிர்க்­கட்­சித்­த­லைவர் ஆகி­யோரை இன்­றைய தினம் (9) சந்­திக்­க­வுள்ளார்.

இவ்­வி­டயம் குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

ஐக்­கிய நாடு­களின் மனித உரி­மைகள் ஆணை­யாளர் செயிட் அல் ஹுசை­னு­டைய இலங்­கை விஜ­யத்தின் இறுதி நாள் இன்­றாகும். இந்­நி­லையில் ஐ.நா மனித உரி­மைகள் ஆணை­யாளர் இன்று காலை 8 மணிக்கு எதிர்க்­கட்­சி­யான தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பை கொழும்­பி­லுள்ள உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்தில் சந்­திக்­க­வுள்ளார். இதன்­போது எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தலை­மை­யி­லான உயர்­மட்டக் குழு­வி­னரை சந்­திக்­க­வுள்ளார்.

அத­னைத்­தொ­டர்ந்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை காலை 9 மணிக்கு சந்­திக்­க­வுள்ளார். இச்­சந்­திப்பு அல­ரி­மா­ளி­கையில் நடை­பெ­ற­வுள்­ளது. இதன்­போது பிர­தமர் ரணில்­விக்­கி­ர­ம­சிங்க உட்­பட முக்­கிய அமைச்­சர்கள் பங்­கேற்­க­வுள்­ளனர்.

பின்னர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் முக்­கிய சந்­திப்­பொன்றை மனித உரிமை ஆணை­யாளர் நடத்­த­வுள்ளார். இதன்­போது ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 30ஆவது கூட்­டத்­தொ­டரில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மானம், சம­கால நிலை­மைகள், உட்­பட பல்­வேறு விட­யங்கள் குறித்து ஆரா­யப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது.

அத­னைத்­தொ­டர்ந்து பிற்­பகல் 2.30இக்கு விசேட ஊட­க­வி­ய­லாளர் மாநா­டொன்றில் கலந்து கொள்ளும் ஆணை­யாளர் நேரடி விஜ­யத்தின்போது அவ­தா­னிக்­கப்­பட்ட விட­யங்கள் உட்­பட பல்­வேறு விட­யங்கள் குறித்த தெளி­வு­ப­டுத்­தல்­களை மேற்கொள்வாரென எதிர்பர்க்கப்படுகின்றது.

இன்று மாலையில் இலங்கைக்கான தனது நான்கு நாள் உத்தியோக பூர்வ பயணத்தினை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் நிறைவு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post