கைது செய்யப்பட்ட லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலியா கொத்தலாவலயை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சிசிலியா கொத்தலாவல கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செலின்கோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலியா கொத்தலாவல கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
லண்டனிலிருந்து டுபாய் ஊடாக இலங்கைக்கு விமானத்தில் வந்த போதே அவர் கைது செய்யப்பட்டார்.
கோல்டன் கீ நிறுவனம் நட்டத்தில் வீழ்ந்ததைத் தொடர்ந்து அதன் வைப்பாளர்கள் நிலையான வைப்பொன்றைக் கோரினர்.
இந் நிலையிலேயே 2009 ஆம் ஆண்டு சிசிலியா கொத்தலாவல நாட்டில் இருந்து தப்பிச் சென்றிருந்தார். இதனையடுத்து அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்நிலையிலேயே அவருக்கு இன்று நீதிமன்றம் விளக்கமறியல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.