Breaking
Sat. Sep 21st, 2024
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை அழிக்கும் பாவச்செயலில் பங்குகொள்ளமுடியாது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (09) நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
51 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனியான குழுவாக செயற்பட அனுமதி கோரி நிற்கின்றனர்.எனினும், இந்த விடயம் குறித்து தனித்து தீர்மானிக்க முடியாது எனவும், சர்வாதிகாரியைப் போன்று செயற்படத் தயாரில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சிக்குள் குழுக்கள் இருக்க முடியும் என்ற போதிலும் குழுக்களுக்குள் கட்சிகள் இருக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியினருக்கு கால நேரம் தொடர்பில் உள்ள பிரச்சினை தமக்கு தெரியும்,அதற்கு தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை அழிக்க ஒத்துழைப்பு வழங்க முடியாது எனவும் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடாத்தி தீர்மானம் எடுக்கப்பட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

By

Related Post