இந்தியா, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்நாக் மாவட்டத்தில் உள்ள மஸ்ஜிதில் இமாமாக இருந்த ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரகாம் டூரு பகுதியில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவம் பற்றிய தகவல் பரவியதும் இங்குள்ள மக்களிடையே பதற்றம் ஏற்பட்டது. தலையில் தாக்கப்பட்டு பலியான இமாம் அப்துல் ஹமித் மாலிக்(வயது 45) மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.