இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க மற் றும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக 31 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒது க்கும் யோசனையை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகம் முன்வைத்துள்ளது.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி அந்த நாட்டின் காங்கிரஸுக்கு அனுப்பிவைத்துள்ள வரவு – செலவுத்திட்ட யோசனையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலின் பின்னர் இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்களுக்கு பின்னர் இலங்கைக்கான அமெரிக்க உதவி புதிய யுகத்தில் நுழைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இவ்வருடம் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியுடன் ஆரம்பமாகும் ஒருவருட காலப் பகுதிக்கான நிதியுதவி குறித்த யோசனையே முன்வைக்கப்பட்டுள்ளது.