ருவன்வெல பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரிகள் இருவர் இலஞ்சம் பெற்ற சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது முறையற்ற விதத்தில் மணல் அகழ்வை மேற்கொள்வதற்கு உதவி புரிவதற்கு சம்பந்தப்பட்டவர்களிடம் 8500 ரூபாய் பணத்தினை இந்தப் பொலிஸ் அதிகாரிகள் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 5000 ரூபாய் பணத்தினை இந்த பொலிஸ் அதிகாரிகள் ஏற்கனவே பெற்றுள்ளதாகவும், மிகுதிப் பணத்தை பெற முற்படுகையிலேயே இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் பிரியந்த சந்திரசிரி தெரிவித்துள்ளார்.