Breaking
Sun. Jan 12th, 2025

– க.கிஷாந்தன் –

காவி உடை அணியாமல் சாதாரண உடையில் காஞ்சாவுடன் சிவனொளிபாதமலைக்கு யாத்திரை மேற்கொண்ட அநுராதபுரத்தை சேர்ந்த 5 பௌத்த பிக்குகளை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அநுராதபுரம் சந்தலாங்காவ பிரதேசத்திலிருந்து சிவனொளிபாதமலைக்கு  யாத்திரைகளாக காவி உடை அணியாமல் சாதாரண உடையில் வந்த 5 பௌத்த பிக்குகளில் ஒரு பிக்குயிடமிருந்து கஞ்சா போதைபொருள் பக்கட்கள் ஹட்டன் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

நேற்று (17) இரவு 11 மணியளவில் ஹட்டன் குடாகம பகுதியில் ரோந்து கடமையில் ஈடுப்பட்டிருந்த ஹட்டன் பொலிஸாரால் இந்த 5 பேர் பயணித்த வாகனம் தீடிரென பரிசோதனைக்குட் படுத்தப்பட்டபோது இதில் ஒருவரிடமிருந்து கஞ்சா தொகை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த 5 பேரையும் கைது செய்த ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட பின் சம்மந்தப்பட்ட ஒரு பிக்குவை இன்று மதியம் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் 4 பௌத்த பிக்குகள் குறித்து, குறித்த விகாரையின் நாயக்க தேரர்க்கு அறிவித்ததன் பின் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

By

Related Post