சிரியா மீது சவூதி அரேபியா தனது துருப்புகளை நகர்த்தியமைக்கு ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து நேற்று முன்தினம் (16) பிரஸெல்ஸின் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் மொஹம்மட் ஜாவட் ஷெரீப், இது சர்வதேச சட்டத்தை மீறும் ஒரு செயலாகும் என்றும் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
இதனிடையே சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல் அஸாத்திற்கு ஆதரவாக படைகள் செயற்பட்டு வருகின்ற நிலையில், இறைமையுள்ள நாட்டின் மீது அனுமதி இல்லாமல் படையை சவூதி தரைப்படையை அனுப்புவது குறித்தும் கேள்வியெழுப்பியுள்ளார்.
இது ஒரு அபாயகரமான விடயமென நாம் உட்பட அனைவரும் நம்புகின்றோம். இதற்கு ஒரு சமாதானமான முடிவினைப் பெறுவதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். மாறாக மென்மேலும் ஆபத்தினை ஏற்படுத்தல் ஆகாது என அவர் கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் சவூதியின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமைச்சர் அதெல் அல் ஜூபிர் கூறுகையில், அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையில் தலைமையேற்று செயற்படவேண்டிய பொறுப்பு சவூதிக்கு உள்ளது என தெரிவித்துள்ளார்.