Breaking
Sat. Nov 23rd, 2024

– ஆர்.கிறிஷ்­ணகாந் –

இலங்­கையில் பாவ­னை­யி­லுள்ள சகல தொலை­பேசி இணைப்­பு­களின் உரி­மை ­யா­ளர்­களை பதிவு செய்­வ­தற்­கான வேலைத்­திட்­ட­மொன்று முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக தொலைத்­தொ­டர்பு ஒழுங்­கு­ப­டுத்தல் ஆணைக்­குழு தெரி­வித்­துள்­ளது.

அனைத்து தொலை­பேசி சேவை வழங்­கு­நர்­களின் ஒத்­து­ழைப்­புடன் இந்த வேலைத்­திட்­ட­த்தினை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

இதன்­போது வேறு ஒரு­வரின் பெயரில் சிம் இணைப்­பு­களை பெற்றுக் கொள்­வது இத்­திட்­ட­த்தி­னூ­டாக தடை செய்­யப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தற்­போது பாவ­னை­யி­லுள்ள சிம் உரி­மை­யா­ளர்கள் தொடர்பில் நிலவும் சிக்­கல்கள் வெகு­வி­ரைவில் தீர்ப்பதற்கு தேவை­யான அனைத்து வச­தி­க­ளையும் வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக தொலைத்­தொ­டர்பு ஒழுங்குப­டுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் மாதங்களில் இவ் வேலைத் திட்டம் அறிமுகப்படுத்தி வைக்கப்பட வுள்ளது.

By

Related Post