மலையக மக்களை இந்திய வம்சாவழியினர் என அடையாளப்படுத்துவதை ஒழித்து இலங்கையர் என்ற கௌரவத்தை வழங்கவேண்டும் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இந்த விடம் தொடர்பாக நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விசேட அதிகாரசபை ஒன்றை அமைக்க வேண்டும் எனவும், அதற்காக அதிகளவிலான நிதியை அரசாங்கள் ஒதுக்கீடு செய்யவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இலங்கை சுதந்திரம் அடைந்து 67 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், மலையக தோட்டத் தொழிலாளர்கள் அடிமைத்தனமான லயன் அறைகளில் கூனிக் குறுகியே வாழ்ந்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.