Breaking
Thu. Nov 14th, 2024
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் ஜனநாயக கட்சிக்கான தென் கரொலினா வேட்பாளர் போட்டியில் பெர்னி சான்டர்ஸை வீழ்த்தி ஹிலாரி கிளின்டன் பெரும் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த சனிக்கிழமை நடந்த உட்கட்சி தேர்தலில் ஹிலாரி கிளின்டனின் வெற்றி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டபோதும், இந்த வெற்றி 11 மாநிலங்களுக்காக செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கும் வாக்கெடுப்பிற்கு அவருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாளை இந்த பிரசாரம் தேசிய அளவில் முன்னெடுக்கப்படும் என்று வெற்றிக்கு பின்னர் ஹிலாரி ஆதரவாளர்கள் முன் குறிப்பிட்டார். மறுபுறும், அவருக்கு தனது வாழ்த்தை தெரிவித்த சான்டர்ஸ், தனது பிரசாரம் தற்போதே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டிருக்கும் நிலையில் ஹிலாரி கிளின்டன் சான்டர்ஸை விடவும் 50 புள்ளிகள் முன்னிலையி உள்ளார்.

இந்த வாக்கு பதிவுகளின் படி பத்தில் எட்டு கறுப்பின வாக்குகள் ஹிலாரிக்கு கிடைத்திருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக கட்சி வாக்காளர்களில் இவர்கள் தீர்க்கமானவர்களாக உள்ளனர்.

தென் கரொலினா வெற்றியானது ஹிலாரி நான்கு மாநிலங்களில் பெறும் மூன்றாவது வெற்றியாகும். அவர் ஏற்கனவே அயோவா மற்றும் நெவாடாவில் வெற்றிபெற்றுள்ளார். சான்டர்ஸ் நியூ ஹாம்ஷயரில் வெற்றியீட்டியுள்ளார்.

By

Related Post