இலங்கையின் ஜனாதிபதி பெயரளவிலேயே பௌத்தராக காணப்படுவதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
பௌத்த பீடங்களுக்கு தலைவர்கள் இருக்கின்றாகள் என்ற போதிலும் பௌத்த மதத்தை வழிநடத்த தலைவர்கள் கிடையாது. மாறாக பௌத்த மத விவகாரங்களுக்கு பொறுப்பானவர்கள் அமைதி காத்து வருகின்றனர்.குறிப்பாக இலங்கையின் ஜனாதிபதி பெயரளவிலேயே பௌத்தராக காணப்படுவதாக கருதும் நிலை உருவாகியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை,ஏனைய மதங்களுடன் ஒப்பீடு செய்யும் போது பௌத்த மதத்தில் வலுவான தலைவர்கள் எவரும் இல்லாத நிலைமை உருவாகியுள்ளதால் பௌத்த பிக்குகளை பிரதிநிதித்துவம் செய்யும் தலைவர் ஒருவரின் அவசியம் தற்போது எழுந்துள்ளது.
அத்தோடு, கிறிஸ்தவ கடும்போக்காளர்கள் இலங்கை பௌத்தர்கள் மீது பிரயோகித்து வரும் அழுத்தங்கள் தொடர்பில் பேசுவதற்கு எவருமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.