Breaking
Fri. Nov 15th, 2024

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் மாற்றுத் தரப்பாக இயங்குவதே மஹிந்த ராஜபக் ஷவின் அரசியலுக்கு பலமாக இருக்கும். தனிக்கட்சி ஆரம்பித்தால் பலவீனமடைவார் எனத் தெரிவித்த தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், 1977 இல் இந்திராகாந்தி இவ் வாறே செயற்பட்டு தனது அரசியல் பலத்தை பலப்படுத்தினாரென்றும் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர். வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில்,

வரலாற்றில் காமினி திஸாநாயக, லலித் அத்துலத் முதலி ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறி தனிக் கட்சி அமைத்தனர். ஆனால் அவர்களால் அரசியலில் வெற்றி பெற முடியவில்லை. ஏனென்றால் அன்று அவர்களுக்கு அரசியல் பின்னணி பலமாக இருக்கவில்லை. இன்று மஹிந்த ராஜபக் ஷவுடன் பலமான அரசியல் பின்னணி உள்ளது.

எனவே, தனிக் கட்சி அமைப்பதை விட்டு தன்னோடுள்ள அரசியல் பலத்துடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் மாற்று அணியாக இயங்குவதற்கான தீர்மானத்தை தைரியமாக எடுக்க வேண்டும். அதனைவிடுத்து அச்ச மடைந்து பின்னோக்கிச் செல்லக்கூடாது.

இந்தியாவில் 1977 இல் காங்கிரஸிலிருந்து இந்திரா காந்தி வெளியேற்றப்பட்டார். ஆனால், அவர் தைரியத்தை இழக்கவில்லை. அவருக்கு பலமான அரசியல் ஆதரவு இருந்தது. எனவே காங்கிரஸிற்குள்ளேயே காங்கிரஸ் என்ற மாற்று அணியாக செயற்பட்டார். பின்னர் நாட்டின் பிரதமரும் ஆனார். இந்த முன்னுதாரணத்தை பின்பற்ற வேண்டும். தனிக் கட்சி அமைக்க வேண்டிய அவசியமில்லை என்றார்.

By

Related Post