பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் புதிய செயலாளர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் புதிய செயலாளராக எச்.டபிள்யு.குணதாசவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருந்தார். சற்று முன்னர் (2) குணதாச தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளராகவும் குணதாச கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்காலிக அடிப்படையில் பாரிய நிதி மோசடிகள் குறித்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளராக குணதாச நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி விசாரணைக் குழுவின் செயலாளராக கடமையாற்றி வந்த லெசில் டி சில்வாவை ஜனதிபதி இடமர்றம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்துதக்கது.