Breaking
Mon. Dec 23rd, 2024

மட்டக்களப்பு – பொலன்னறுவை கொழும்பு பிராதான வீதியின் வெலிகந்த பிரதேசத்திற்கு அருகாமையில் தனியார் பஸ் ஒன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 40 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி விபத்துக்குள்ளான பஸ் வண்டி கதுறுவெலையிலிருந்து மட்டக்களப்பு பக்கமாக கல்முனை நோக்கி பயணித்த வேளையிலே குடை சாய்ந்துள்ளது.

இதனால் குறித்த பஸ் வண்டியில் பயணித்த சுமார் 40பேர் காயமடைந்த நிலையில் பொலன்னறுவை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த விபத்துச் சம்பவம் நேற்று (2)  மாலை சுமார் 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

By

Related Post