Breaking
Sat. Dec 13th, 2025

பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் 20 பேருக்கு எதிராக சர்வதேச பொலிஸார் சிகப்பு பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த இருபது பாதாள உலகக்குழு உறுப்பினர்களை கைது செய்யும் நோக்கில் இவ்வாறு பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்ககளுடன் தொடர்புடைய இவர்கள் பொலிஸாரினால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை ஐஸ் மஞ்சு என்பவரும் இதில் அடங்குகின்றார். நாட்டிலிருந்து தப்பிச் சென்ற பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இத்தாலி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் குறித்த நாடுகளின் பொலிஸார் பாதாள உலகக்குழு செயற்பாட்டாளர்கள் தொடர்பில் அதிக கரிசனை காட்டுவதில்லை எனவும் புகலிடக் கோரிக்கையாளர் பிரச்சினையே அந்த நாடுகளில் முதன்மையானது எனவும் சிங்கள ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் அதிகளவான பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இத்தாலியில் மறைந்து வாழ்வதாக தெரிவிக்கப்படுகிறது.

By

Related Post