Breaking
Fri. Nov 22nd, 2024

யோஷித ராஜ­ப­க் ஷ­வுக்கு எதி­ரான ஆதா­ரங்­க­ளாக கரு­தப்­படும் பல மின்­னஞ்­சல்கள் வெளிநாட்டில் இருந்து செயற்­படும் ஒரு­வரால் அல்­லது குழு­வொன்­றினால் அழிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது.

சி.எஸ்.என். நிறு­வ­னத்தின் ஆரம்ப மூல­த­ன­மான 234 மில்­லியன் ரூபா எவ்­வாறு பெறப்­பட்­டது என்­பது தொடர்பில் விளக்­க­ம­ளிக்­கா­ததை அடிப்­ப­டை­யா­கவும் போலி ஆவ­ணங்­களை தயா­ரித்­தமை, திட்­ட­மிட்டு நம்­பிக்கைத் துரோகம் செய்­தமை , திட்­ட­மிட்ட மோசடி, சுங்க சட்­டத்தை மீறி­யமை மற்றும் நிறு­வன சட்­டங்­களை மீறி­யமை, அர­சாங்க சொத்­துக்­களை தவ­றாக பயன்­ப­டுத்­தி­யமை தொடர்­பிலும் கைதா­கி­யுள்ள யோஷித உள்­ளிட்ட சந்­தேகநபர்­க­ளுக்கு எதி­ரான விசா­ர­ணைகள் தொடர்ந்து வரு­கின்­றன. இந்த நிலையில் நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் யோஷித ராஜ­ப­க் ஷ­வி­னு­டைய மின்­னஞ்­சல்கள் அடங்­கிய இறு­வட்­டொன்று கைப்­பற்­றப்­பட்டு விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்பட்டு வரு­கின்­றன. அதில் 4000 இற்கும் அதி­க­மான மின்­னஞ்­சல்கள் உள்ள நிலையில், வெளி நாட்­டி­லி­ருந்து ஒருவர் யோஷி­த­வு­ட­னான தொடர்­புகள் அடங்­கிய மின்­னஞ்­சல்­களை அழித்­துள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது.

இது தொடர்பில் நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் நேற்றுக் காலை அரச சட்­ட­வா­திக்கு அறி­வித்­துள்­ள­தாக மேல் நீதி­மன்றில் இடம்­பெற்ற வழக்கு விசா­ர­ணையின் போது அவர் சுட்­டிக்­கட்­டினார்.

ஈ மெயில் பெக்கப் மிஸ்டர் யோஷித’ என பெய­ரி­டப்பட்­டி­ருந்த இறுவட்டு குறித்து பொலிஸார் தொடர்ச்­சி­யாக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்ள நிலை­யி­லேயே, பல மின்­னஞ்­சல்கள் அழிக்­கப்பட்­டுள்­ள­மையும், வெளிநாட்­டி­லி­ருந்தே அந்த

நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்பட்­டுள்­ள­மை யும் தெரியவந்துள்ளது.

சி.எஸ்.என். குறித்த விசாரணைகளுக்கு தொடர்ச்சியாக பாரிய சவால்கள் உள்ள மையை இது தெளிவுபடுத்துவதாக அரச சட்டவாதி மன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.

By

Related Post