Breaking
Sat. Dec 13th, 2025
பொதுமக்களுடனான சந்திப்பு தினங்களில்  அரச பணியாளர்கள் வேறு கூட்டங்களை நடாத்துவதாகவும் பொதுமக்களை சந்திப்பதை தவிர்த்து வருவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் முறையிடப்பட்டுள்ளது.
அலரி மாளிகையில் நேற்று ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, பதுளை மாவட்ட நடாளுமன்ற உறுப்பினர் ஏ.அரவிந்தகுமார் இவ்விடயத்தை பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
மக்களுடனான சந்திப்பு தினமாக புதன்கிழமைகளில் அரச பணியாளர்கள் வேறு கூட்டங்களை நடாத்தச் செல்வதால், மக்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து, புதன்கிழமைகளில் வேறு விடயங்களை மேற்கொள்வதைத் தவிர்த்து மக்களை சந்திப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு பொது நிர்வாக அமைச்சருக்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.

By

Related Post