இலங்கையின் ஊடகங்கள் குறித்து திருப்தி அடைய முடியாது என ராவய பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஊடகங்களிடமிருந்து எதனையும் எதிர்பார்க்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பு ஊடகங்களுக்கு காணப்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகங்களை தூய்மைப்படுத்த காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
தாம் ராவய ஊடகத்தில் ஆசிரியராக கடமையாற்றிய போது உச்ச அளவில் ஊடக ஒழுக்க விதிகளை பின்பற்றி செய்தி அறிக்கையிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
புலனாய்வு செய்தி அறிக்கையிடல் தொடர்பில் இலங்கை ஊடகங்களின் நிலைமை திருப்தி அடையக்கூடிய வகையில் கிடையாது என அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார்.
கடுமையான அழுத்தங்கள் அச்சுறுத்தல்களை தாண்டி தாம் புலனாய்வு செய்தி அறிக்கையிடலை வெற்றிகரமாக மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
அச்சுறுத்தல் காரணமாக சுய தணிக்கை அடிப்படையில் செய்தி அறிக்கையிடப்படுவதாக ஊடகவியலாளர்கள் கூறினால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஊடகங்கள் மோசமாகவே செயற்பட்டு வருவதாக அவர் விமர்சனம் செய்துள்ளார்.
– gtn –