Breaking
Mon. Nov 25th, 2024

– அஷ்ரப் ஏ சமத், சத்தார் எம் ஜாவித் –

மஹ­ர­கம புற்றுநோய் வைத்­தி­ய­சா­லைக்கு நவீன ரக பெற் சி.ரி ஸ்கேனர் ஒன்றை வழங்­க­வ­தற்கு இன, மத பேத­மின்றி ஒன்­றி­ணைந்து உத­வு­மாறு வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டுள்­ளது.

மஹ­ர­கம புற்றுநோய் வைத்­தி­ய­சா­லையில் சுமார் 1,100 பேர் தங்கி சிகிச்சை பெறு­வ­தா­கவும், அத­னை­விட நாளாந்தம் சுமார் 1,500 பேர் வரை சிகிச்­சை­களை பெற்றுச் செல்­வ­தற்­காக வருகை தரு­வ­தா­கவும் வைத்­தி­ய­சாலை தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இதே­வேளை, இலங்­கையில் சுமார் ஒரு இலட்­சத்­திற்கும் அதி­க­மா­ன­வர்கள் இந்த நோயினால் பாதிக்­கப்­பட்டு அவ­தி­யு­று­வ­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இவ்­வாறு வரு­ப­வர்­களுக்கு புற்று நோயைக் கண்­ட­றிந்து சிறந்த முறையில் சிகிச்­சை­ய­ளிப்­ப­தற்கு தம்­மிடம் தர­மான நவீன ரக சி.ரி. ஸ்கேனர் இயந்­திரம் இல்­லாத கார­ணத்தால் வைத்­தி­யர்­களும் நோயா­ளர்­களும் பாரி­ய­ளவில் அசௌ­க­ரி­யங்­களை எதிர்­கொள்­வ­தாக மஹ­ர­கம புற்று நோய் வைத்­தி­ய­சா­லையின் சிரேஷ்ட வைத்­திய நிபு­ணரும் ஆலோ­ச­க­ரு­மான மகேந்­திர சோம திலக தெரி­விக்­கின்றார்.

மஹ­ர­கம புற்றுநோய் வைத்­தி­ய­சா­லையில் இந்த இயந்­திரம் இல்­லாது சுமார் இரு­பது வரு­டங்கள் பழைமை வாய்ந்த சாதா­ரண சி.ரி இயந்­திரம் ஒன்­றி­னா­லேயே நோயா­ளி­களின் பரி­சோ­த­னைகள் இடம் பெறு­வ­துடன், அங்கு வரும் நோயா­ளிகள் தமது சிகிச்­சைக்­காக ஏக்­கத்­துடன் காத்­தி­ருப்­ப­தையும் அவ­தா­னிக்க முடி­கின்­றது.

இந்த வகையில் மஹ­ர­கம தேசிய புற்றுநோய் நிறு­வ­னத்­துடன் கதீஜா நிறு­வ­னமும் இணைந்து புதி­ய­ரக இயந்­திரம் ஒன்றைக் கொள்­வ­னவு செய்ய முயற்­சி­களை முன்­னெ­டுத்­துள்­ளது.

தம்மால் முடிந்­த­ளவு நிதி உத­வியை வழங்கலாம் என தெரிவிக் கப்பட்டுள்ளது. குறிப்­பாக, மஹ­ர­கம புற்று நோய் வைத்­தி­ய­சா­லையின் வங்­கிக்­க­ணக்கில் வைப்புச் செய்­வதன் (இலங்கை வங்கி மஹ­ர­கம கிளை, கணக்கு இல: 0071275069) மூலம் மேற்­படி வேலைத்­திட்­டத்தின் நோக்­கத்தை அடைந்து கொள்­ளலாம் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

வங்­கியில் வைப்­பிலிடும் விபரம்

National Cancer Institute, Maharagama
Bank of Ceylon, Maharagama  Account
No 007125069
Branch code 055 Bank code 7010
tel :0094- 1122897377/78
email:info@fightcancer.lk
website: www.fightcancer.lk

By

Related Post