Breaking
Mon. Dec 23rd, 2024

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது சில கையடக்கத் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டமையை அடுத்து, சிறைச்சாலையை சூழவுள்ள பகுதியில் கையடக்கத் தொலைபேசிகளை பாவிக்க புதிய பாதுகாப்பு முறையொன்றை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகள் கைபேசியைப் பயன்படுத்தி பல்வேறு குற்றச் செயல்களை புரிய முயற்சிப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த காலங்களில் இடம்பெற்ற சில கொலைகள், ஆட் கடத்தல்கள் மற்றும் கொள்ளை போன்ற பல குற்றங்கள் சிறைச்சாலைகளுக்குள் உள்ள கைதிகளாலேயே வழிப்படுத்தப்பட்டதாகவும் இந்த நிலையை கருத்தில் கொண்டு, சிறைச்சாலையைச் சூழவுள்ள பகுதிகளில் கைபேசிப் பாவனைகளைக் கட்டுப்படுத்த, தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post