பாதாள உலகக் குழுச் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் நியமிக்கப்பட்ட விசேட குழு நடத்திய ஆய்வுகளின் மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சுற்றுலா விடுதிகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் செல்வந்தர்களிடம் கப்பம் பெற்றுக் கொள்ளல் மற்றும் ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தகம் ஆகியனவே இந்த பாதாள உலகக் குழுக்களின் பிரதான வருமானமாக அமைந்துள்ளது.
பாதாள உலகக்குழு உறுப்பினர்களுக்கு இடையிலான மோதல்களினால் மேற்கொள்ளப்படும் கொலைகள் மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான கொலைகள் காரணமாக தெற்கில் பாதாள உலகக் குழு பீதி ஏற்பட்டுள்ளது.
பலபிட்டிய, ஹிக்கடுவ உள்ளிட்ட தெற்கின் பல இடங்களை மையமாகக் கொண்டு இந்த பாதாள உலகக் குழுக்கள் செயற்பட்டு வருகின்றன.
பாதாள உலகக் குழுக்களின் இருப்பிடங்கள் அவர்களின் செயற்பாடுகள் குறித்த தகவல்களை பொலிஸார் திரட்டியுள்ளதாகவும், இந்தக் குழுக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.