Breaking
Mon. Dec 23rd, 2024
அரசியல்வாதிகள் தொடர்பில் பேஸ்புக் மூலம் அவதூறு பரப்பும் கும்பல் தொடர்பில் இன்னும் சில நாட்களில் தகவல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (16) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பின்போது சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும், கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சருமான மஹிந்த அமரவீர இந்த விடயம் தொடர்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பேஸ்புக் கும்பலில் 40 தொடக்கம் 50 வரையான நபர்கள் இருப்பதாகவும், இவர்களுக்கான பணம் வழங்குவதெற்கென சிலர் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கும்பல்கள் அரசியல்வாதிகளைப் பற்றி அவதூறு பரப்புவதையே தமது தொழிலாகக் கொண்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் கூடிய விரைவில் இந்த கும்பல் தொடர்பில் தகவல்களை தம்மால் வெளிப்படுத்தப்பட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

By

Related Post