நல்லிணக்க பங்காளர்கள், நிபுணர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோரின் நல்லிணக்க பொறிமுறைகள் பற்றிய கருத்துக்களை ஒன்லைனில் சமர்பிப்பதற்காக நல்லிணக்க பொறிமுறைகளுக்கான ஆலோசனை வழங்கும் விஷேட செயலணி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளது.
காணாமற் போனோர் அலுவலகம், உண்மை, நீதி, நல்லிணக்கம் மற்றும் மீள்-நிகழாமைக்கான ஆணைக்குழு, சட்டப் பொறிமுறைகள், இழப்பீட்டிற்கான அலுவலகம் என்பனவற்றை உள்ளடக்கியதாக நல்லிணக்க பொறிமுறைகளை அமைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும், கருத்துக்களை சமர்ப்பிக்க்கும் வகையில் இவ் ஆலோசனை கோரல் செயன்முறை இணையத்தளத்திற்கான சமர்ப்பணப் படிவத்தினை மும்மொழிகளிலும் “www.scrm.gov.lk” இல் பெற்றுக்கொள்ளலாம்.
அத்துடன் நல்லிணக்க நிறுவனங்களின் வடிவமைப்பில் தங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்க பொதுமக்களை ஊக்குவிக்கும் முகமாக நாடெங்கும் இவ் ஆலோசனை கோரல் செயன்முறை நடாத்தப்படும்.
பின்னணித் தகவல்கள்
01. ஆலோசனை கோரல் செயன்முறை
https://docs.google.com/forms/d/1FFD0zWmR-TFO37ec_GIHOF77fAfC87JaZipWSAZOtxY/formResponse
02. ஆலோசனை சமர்ப்பிக்க பொதுமக்களை நெறிப்படுத்தல்
http://www.scrm.gov.lk/#!guiding-principles/wb9ad
03. ஆலோசனை செயலணி அங்கத்தவர்கள்
மனூரி முத்தெட்டுவேகம (தலைவர்), கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து (செயலாளர்), காமினி வெயங்கொட, விசாகா தர்மதாச சாந்தா,
அபிமானசிங்கம், பேராசிரியர் சித்ரலேகா மௌனகுரு, கே. யூ. ஜனரஞ்சன, பேராசிரியர் தயா சோமசுந்தரம், கலாநிதி பர்சானா ஹனீபா,
கலாநிதி கமீலா சமரசிங்க, மிராக் ரஹீம்.
Comments are closed.