இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்க 167 நாடுகளைச் சேர்ந்த சபாநாயகர்கள் உட்பட 2000 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையிலிருந்து சபாநாயகர் கருஜயசூரியவுடன் இராஜங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க,பிரதி அமைச்சர் சுதர்சினி பெர்னான்டோபுள்ளே, பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான்,கே.கோடீஸ்வரன், பாராளுமன்ற செயலாளர் தம்மிக தசநாயக்க உள்ளிட்டோர் அங்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்முறை இந்தக்கூட்டத் தொடரின் போது மனித உரிமைகள், அனைத்து பாராளுமன்றத்தின் ஒத்துழைப்பு, சட்டமன்ற செயல்முறை மற்றும் பெண்கள் பங்களிப்பு, ஊக்குவித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அதிகளவு அவதானம் செலுத்தப்படவுள்ளது.
மேலும், உறுப்புரிமை நாடுகளில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் கொல்லப்பட்ட ஜெயராஜ் பெர்ணாந்துபுள்ளே,ஜோசப் பரராஜசிங்கம், சடராஜா ரவிராஜ், மகேஸ்வரன், தசநாயக்க ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பிலும் குறித்தக் கூட்டத்தொடரில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.