கொழும்பில் இன்று (27) நடைபெற்ற செய்தியாளா சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஆகியோர் பங்கேற்கும் கூட்டங்களில் பங்கேற்று கூக்குரல் இடுவதனால் கட்சியை தோற்கடித்துவிட முடியாது.
சில திட்டமிட்டு இவ்வாறு கூக்குரல் இடுவதனால் கட்சியை உள ரீதியாக பாதிப்படைச் செய்ய முடியும் என நினைக்கின்றார்கள்.
ஒன்றைக் கூற விரும்புகின்றேன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் போன்று நேர்மையான ஜனநாயக ரீதியான ஓர் அரச தலைவர் நாட்டில் இருந்ததில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மைத்திரிபால சிறிசேனவிற்கோ, மஹிந்த ராஜபக்சவிற்வோ அல்லது சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்வோ சொந்தமான தனிச்சொத்து கிடையாது.
இதனால் அனைத்து தலைவர்களும் ஒன்றிணைந்து கட்சியை பாதுகாத்து கொள்ள முயற்சிக்க வேண்டுமென பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.