இலங்கையில் முன்னெடுக்கப்படும் சீன முதலீடுகள் மற்றும் திட்டங்களை ஒழுங்கமைக்கும் வகையில்உயர்மட்ட குழுவொன்றை நியமிக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் உடன் இடம்பெற்ற சந்திப்பின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த உறுதி மொழியினை வழங்கியுள்ளார்.
இந்த உயர்மட்ட குழு 03 பேரை உள்ளடக்கியதாக இருக்கும் என பிரதமர் இதன் போது சீன ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
விசேட திட்டங்களுக்கான அமைச்சர் சரத் அமுனுகம, அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம, கொள்கைத் திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஆலோசகர் ஆர். பாஸ்கரலிங்கம் ஆகியோர் இந்த விசேட குழுவில் உள்ளடங்குவார்கள் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.