மலேரியா நோயால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் நேற்றைய தினம் (11) நுவரெலியாவில்அடையாளங் காணப்பட்டதைத் தொடர்ந்து இந்த நோய் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகள் தொடர்பாக விசேட மருத்துவப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக மலேரியா ஒழிப்பு பிரிவின் வைத்தியர் எச்.டபிள்யூ.பீ.ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நேற்றைய தினம் நுவரெலியாவில் அடையாளம் காணப்பட்ட இந்தியப் பிரஜையான மலேரியா நோயாளியுடன் சேர்த்து இதுவரை இலங்கையில் 16 மலேரியா நோயாளிகள்அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கைக்குள் மலேரியா நோயாளி ஒருவர் அடையாளங் காணப்பட்டமை தொடர்பில் சுகாதார அமைச்சு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை வைத்திய அதிகாரிகள்சங்கத்தின் செயலாளர் நளிந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.