Breaking
Fri. Mar 28th, 2025

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரராக இருந்த கலகம அத்ததஸ்ஸி தேரர்அண்மையில் காலமானதையடுத்து, அஸ்கிரிய மகாநாயக்கதேரர் பதவியைப் பெறுவதற்கு இரண்டு மகாநாயக்கர்கள் களத்தில் குதித்துள்ளனர்.

மகியங்கனை விகாராதிபதியான வரகாகொட ஞானரத்னதேரரும் பொலனறுவை 12 தலங்களின் விகாராதிபதியான வெண்டருவே உபாலி தேரருமே இப்பதவிக்கான போட்டியில் குதித்துள்ளனர்.

தற்பொழுது அஸ்கிரிய பீடத்தின் துணை மகாநாயக்கர்களாக பதுளை மகியங்கனை விகாராதிபதியும் பொலனறுவை 12 தலங்களின் விராதிபதியும் உள்ளனர்.

இது தொடர்பாக அஸ்கிரிய பீடாதிபதி தேரர்கள் குழுவுக்கு இவர்கள் இருவரும் முறையாக அறிவித்துள்ளனர்.

இதற்குத் தகுதியான ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் எதிர்வரும் 7ஆம் திகதி அஸ்கிரிய பீடத்தின் பிரதான விகாரையில் நடைபெறவிருக்கின்றது.

By

Related Post