இலங்கையில் இணைய வசதியினை விஸ்தரிப்பதற்காக நாடுபூராகவும் கூகுல் இணைய பலூன் வசதியினை ஏறபடுத்தவுள்ளதாக தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிடல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதோடு இலகு இணைய தரவிறக்கம் மற்றும் அதிவேக இணைய வசதியினை ஏற்படுத்த முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோல் பேஸ் ஹோட்டலில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.