Breaking
Sat. Dec 13th, 2025

தமிழகத்தின் சேலம் பகுதியில் கழுத்தை அறுத்துக் கொண்ட இலங்கைத்  தமிழர் முகாமை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு சேலம் அரச வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை, இலங்கைத்  தமிழர் முகாமை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் சசிகுமார் என்பவரே இவ்வாறு  தனது கழுத்தை அறுத்துக் கொண்துள்ளார்.

இவர் கோவையில் பெயின்டராக வேலை செய்து வருகிறார். விடுமுறை நாளில், திருவண்ணாமலை முகாமுக்கு சென்று, குடும்பத்தினரை பார்த்து வருவது வழக்கம். நேற்று கோவையில் இருந்து, சேலம் பஸ்ஸில் வந்த இவர், புது பஸ் நிலையத்தில், போத்தல் ஒன்றை உடைத்து, கழுத்தை அறுத்துக் கொண்டார் என தமிழக ஊடகமான தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த பள்ளப்பட்டி பொலிஸார், அவரை  மீட்டு, சேலம் அரச வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சேர்த்ததோடு, இது குறித்து விசாரணைகளையும்  மேற்கொண்டு வருகின்றனர்.

By

Related Post