எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கூட்டு எதிரணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தினேஷ் குணவர்தன எம்.பி,
இன்றிலிருந்து பதின்நான்கு நாட்களுக் குள் உள்ளூராட்சி மன்ற தேர்தல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட வேண்டும் அவ்வாறு அறிவிக்காத பட்சத்தில் அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது தேர்தல் திகதி தொடர்பில் கேள்வி எழுப்புவோம்.
கடந்த ஜனவரி எட்டாம் திகதி தேர்தல் வெற்றியின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் நிகழ்த்திய முதலாவது உரையில் தேர்தல் திகதியை காலம் தாழ்த்தவே மாட்டோம் என்று சூளுரைத்திருந்தார்.
அதற்கமைய இன்றுடன் சகல உள்ளூரா ட்சி மன்றங்களினதும் நீடிக்கப்பட்டிருந்த கால வரையறை முற்றுப்பெறுகின்றது. எனவே எதிர்வரும் தேர்தலுக்கான திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட வேண் டும்.
மாறாக சட்டத்தை ஜனாதிபதியினதும் பிரதமரினதும் வீட்டுச் சொத்துப்போல் தாம் நினைக்கும் விதத்தில் பயன்படுத்திக் கொள்ள எண்ணவேண்டாம் என்றார்.