யு.எல்.309 என்ற ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் நேற்றுமுன்தினம் சிங்கப்பூர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சற்று நேரத்தில் தரையிறக்கப்பட்டது.
விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கிய பாதுகாப்பு தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பை அடுத்தே விமானம் தரையிறக்கப்பட்டது.
விமானம் தரையிறக்கப்பட்ட பின்னர்இ சில பயணிகளிடம் சிங்கப்பூர் பொலிஸாரும்இ விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளும் விரிவான விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
இவர்களில் 5 பேர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் கூறியுள்ளது. விமானத்தில் இருந்து அனைத்து பொதிகளும் இறக்கப்பட்டு மீண்டும் சோதனையிடப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் விமானம் ஒன்று விமான நிலையம் ஒன்றில் இருந்து புறப்படும் முன்னர்இ முழுமையாக சோதனையிடப்பட வேண்டும் என்ற சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை ஒன்று இருப்பதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான நிலையில்இ விமானம் புறப்பட்டு சற்று நேரத்தில் தரையிறக்கப்பட்டு சோதனையிடப்பட்டமை தொடர்பில் சிங்கப் பூர் சிவில் விமான சேவை அதிகார சபை யிடம் விளக்கம் கோரப்படும் எனவும் நிறு வனம் கூறியுள்ளது.