வெளிநாட்டு நேரடி முதலீடுகள் மீதான பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை திகழ்கின்றது. மற்றும் முதலீட்டாளர்களை பாதுகாக்க பொறிமுறைகள் பல உள்ளன. இலங்கையின் அரசியலமைப்பும் வெளிநாட்டவர்களின் முதலீட்டுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கிறது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
கடந்த வாரம் டுபாய் உலக வர்த்தக மையத்தில் இடம்பெற்ற மூன்று நாள் கொண்ட 2016 ஆம் ஆண்டுக்கான வருடாந்த முதலீட்டு கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் ரிஷாட் இதனை தெரிவித்தார். உலகத்தலைவர்கள். அரச அதிகார்pகள், அமைச்சர்கள், வர்த்தக பிரதிநிதிகள், முதலீட்டாளர்கள் உட்பட பல பிரமுகர்கள் கலந்துக்கொண்ட இக் கூட்டத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்தாவது:
நாட்டின் நிரந்தர சமாதானம் மற்றும் நிலையான பொருளாதாரம் நிலவும் நிலையில் சுற்றுலா துறை, உற்பத்தி சேவை துறை, தகவல் தொழில்நுட்பத் துறை, விவசாயம் போன்ற பல துறைகள் மீது முதலீட்டு வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
டுபாய் நாட்டின் வருடாந்த முதலீட்டு கூட்டம் உலகத்தலைவர்கள். அரச அதிகார்pகள,; அமைச்சர்கள், வர்த்தக பிரதிநிதிகள் உட்பட பல பிரமுகர்களை சந்தித்து தொன்மைவாய்ந்த முதலீட்டு வாய்ப்புக்களை விவாதிக்க தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இக் கூட்டத்தில் இலங்கைக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் இக்கூட்டத்தில் நான் பங்கேற்றி வருகின்றேன் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். இதன் மூலம் எனக்கு நல்ல அனுபவம் கிடைத்துள்ளதுடன் உலகத்தலைவர்கள் ஊடாக ஒரு வளைப்பின்னல் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கிடைக்கக்கூடிய நம்பிக்கையான பல்வேறு முதலீட்டு வாய்ப்புக்கள் காணப்படுகின்றதை தெளிவாக முன்வைத்துள்ளேன்.
ஐக்கிய அரபு நாடுகள் இலங்கையின் மிகப் பெரிய முதலீட்டாளாக காணப்படுகின்றன. அண்மையில் இந்நாடுகள் ஆட்டோமொபைல், தொலைத் தொடர்பு, உற்பத்தி, ஹோட்டல் தொழில், சுற்றுலா துறை முதலியனவற்றில் முதலீடு செய்துள்ளனர். எனது அமைச்சு சாத்தியமான முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்ய ஆர்வமாக தேவையான வழிகாட்டல்கள் மற்றும் உதவி வழங்கும்.
இலங்கையின் பெரிய வர்த்தக பங்காளியாக இருக்கும் ஐக்கிய அரபு நாடுகளின் இரு தரப்பு வர்த்தகம் 2015 ஆம் ஆண்டில் 1.35 பில்லியன் அமெரிக்க டொலராக எட்டப்பட்டது. ஐக்கிய அரபு நாடுகளின் சந்தையில் நுழைய இலங்கை நிறுவனங்கள் பல ஆர்வமாக உள்ளன.
2016 ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கை மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் இடையே இரு தரப்பு வர்த்தகத்தின் முடிவுகள் சிறந்த முன்னேற்றத்தை எட்டும் என்று நான் நம்புகிறேன்.
ஐக்கிய அரபு நாடுகளின் 2020 ஆண்டில் எக்ஸ்போ வர்த்தக சந்தையில் இலங்கை ஒரு வலுவான ஆதரவாளர். இலங்கையின் வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா துறையினை ஊக்குவிக்க எக்ஸ்போ வர்த்தக சந்தையில் பெரிய அரங்களை அமைத்து அதனை சாதகமாக பயன்படுத்தி உலக நாடுகள் மத்தியில தகுதிபெற செயல்படுவோம்.
இலங்கையின் பொருளாதாரம் அண்மையில் திருப்திகரமான அளவில் 6மூ சத வீத வளர்ச்சி கண்டுள்ளது.
சர்வதேச சந்தையில் பொருளாதார நிலைமை பாதிப்படைந்த போதிலும், இலங்கை பொருளாதாரம், ஏற்றுமதி மற்றும் சுற்றுலா திருப்திகரமான வளர்ச்சியை கண்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு மூலம் தொழிலாளர்களால் அனுப்பும் பணம் இலங்கையின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியில் பாரிய பங்களிப்பு செய்துள்ளது. நாங்கள் மேலும் வேலை வாய்ப்புகளை உருவாக்கவுள்ளோம். மற்றும் எங்கள் உற்பத்தி துறை முந்தைய ஆண்டுகளில் விட சிறப்பாக செயல்பட முன்னெற்பாடாக இருக்கினறோம். இது இலங்கைக்கு மேலும் வெளிநாட்டு நேரடி முதலீடு ஓட்டத்தினை ஏற்படுத்தும் என எதிர்பார்கின்றோம்.
உலக சந்தையின் சரிவு இலங்கை போன்ற நாடுகளின் பொருளாதாரத்தை சிறியளவில் பாதிப்படைய செய்கிறது.
எண்ணெய் விலை மாற்றத்தினால் ரஷ்யர் மற்றும் மத்திய கிழக்கு சந்தைகளில் எங்கள் முக்கிய ஏற்றுமதி பொருளான தேயிலை ஏற்றுமதியில் சில சிரமங்களை சந்திக்க நேரிடுகிறது. ஆனால் இவை குறுகிய கால இடையூறுகள் நீண்ட காலம் நீடிக்காது என்று நான் நினைக்கின்றேன். எனவே பெரிய பொருளாதாரங்களினை இலங்கை போன்ற நாடுகள் மீண்டும் செயல்படுத்தி உலகப் பொருளாதாரத்தில் வேகமாக மீள் பயனடைய முடியும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை ஆசியாவில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் கிடைக்கும் நாடுகளின் வரிசையில் இலங்கை முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்படுவதுடன், நேரடி முதலீடுகள் கிடைக்கும் நாடுகளின் வரிசையில் முதல் பத்துக்குள் இலங்கையும் இடம்பிடித்துள்ளது.
இலங்கையைத் தவிர, சீனா, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், மியன்மார், தாய்லாந்து, பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளும் உள்ளடங்குகின்றன. அதுமாத்திரமன்றி தெற்காசிய வலய நாடுகளில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் அதிகளவு வளர்ச்சியை பதிவு செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது