Breaking
Fri. Nov 15th, 2024

பிரித்தானியாவின் மூன்றாவது முடிக்குரிய இளவரசர், வில்லியம் கேத் தம்பதிகளில் மூத்த மகன் இளவரசர் ஜோர்ஜ் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் உரையாடும் புகைப்படம் நேற்று (22) வௌியாகியுள்ளது.

லண்டனிலுள்ள கெனிங்ஸ்டன் மாளிகையில் இரவு உறங்க செல்ல முன்னர் அமெரிக்க ஜனாதிபதியும் அவரது பாரியாரும் இளவரசர் ஜோர்ஜ் சந்தித்துள்ளனர்.

இரவுடையில் உறங்க தயாராக இளவரசர் இருக்கும் சந்தர்ப்பத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது அவருடைய தந்தை இளவரசர் வில்லியமும் உள்ளார். ஜேர்மனி செல்லும் வழியில் லண்டனுக்கு சென்ற அமெரிக்க ஜனாதிபதி அங்கு வின்ஸ்டர் மாளிகையில் மகாராணியாருடனான பகலுணவில் கலந்து கொண்டு பின்னர் இரவு கெனிங்ஸ்டன் மாளிகையில் வில்லியம்- கேட் தம்பதிகள் மற்றும் இளவரசர் ஹரி ஆகியோருடானா இரவு விருந்துபசாரத்தில் கலந்து கொண்டார்.

இளம் அரச குடும்ப அங்கத்தவர் ஒருவர் தனிப்பட்ட ரீதியாக அரச தலைவர் ஒருவரை சந்திப்பது இதுவே முதற் தடவை என்று டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.

By

Related Post