Breaking
Fri. Nov 22nd, 2024

நாடு பூராகவும் உள்ள பொலிஸ் நிலையங்களில் மாதத்திற்கு ஒருமுறை நடமாடும் பொலிஸ் தொலைபேசி சேவை முறையினை கிராம நகர மக்களை நேரடியாக அணுகுவதற்காக அமுல்படுத்தவுள்ளதாக புதிய பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ஒரு பொலிஸ் தொலைபேசி சேவை முடிவடையும் நேரத்தில் நாட்டில் இன்னொரு பொலிஸ் தொலைபேசி சேவை ஆரம்பிக்கும் என்றும் மேலும் தெரிவித்தார்.

பொலிஸ் பகுதியில் சமயம், விளையாட்டு, கல்வி, சுகாதாரம், சிரமதானம் மற்றும் கலாச்சார நிகழ்வுகளுடன் தொடர்புடைய சங்கங்களுடன் இணைந்து செயற்பட பொலிஸ் நிலையங்கள் உறுதுணையாய் இருக்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும் பிரதேச உப பொலிஸ் மா அதிபர் உதவியுடன் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் கிராமத்துக்கும் பொலிஸாருக்கும் இடையிலாக நல்லுறவு கட்டியெழுப்பப்படு;ம். இந்நிகழ்வு கட்டாயமாகவும் தொடர்ச்சியாகவும் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் தெரிவித்தார்.

எல்லா பொலிஸ் நிலையங்களிளும் தொண்டர் ஆலோசனை குழு அமைக்கும் அதேநேரத்தில் அங்கு பிரதேச வைத்தியர், சட்டத்தரணிகள் போன்ற உயர் தொழில்களில் உள்ள அதிகாரிகளையும் ஈடுபடுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.

By

Related Post