எதிர்வரும் காலத்தில் நகர்புற குடியிருப்புக்கள் மற்றும் கிராம புற குடியிருப்புக்கள் உருவாக்கும் திட்டம் தொடர்பாக அரச திறைச்சேரி உண்டியலில் இருந்து பண உதவிகள் வழங்கப்பட மாட்டாது என்று அரசு தீர்மானித்துள்ளது.
மேலும் தேசிய மற்றும் சர்வதேச முதலீடுகளினால் மட்டுமே நகர மற்றும் கிராமிய குடியிருப்புத் திட்டங்கள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
குடியிருப்புக்கள் உருவாக்கத் திட்டமிடப்பட்டும் நிலங்கள் அரசின் மூலம் வழங்கப்படுவதுடன் கடுமையான நிபந்தனைகளின் கீழ் முதலீட்டாளர்கள் மூலம் வழங்குவதற்கு அரசு தீர்தானித்துள்ளது.
இப்புதிய திட்டத்தின் மூலம் கொழும்பில் குறைந்த வருமானத்தில் வாழ்வோருக்கு 50,000 குடியிருப்புக்கள் உருவாக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொருளாதார கண்காணிப்புக்குழுவின் மூலம் இச்செயற்பாடுகள் இடம்பெறவுள்ளது.