இலங்கையுடனான உறவுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா முக்கியத்துவம் அளிப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான அமெரிக்க வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்ற இலங்கை அமெரிக்க வர்த்தக மற்றும் முதலீட்டு உடன்படிக்கை குறித்த கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு தொடர்ச்சியான வகையில் ஒத்துழைப்புக்களை வழங்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மக்களுக்கு சமூக பொருளாதார நன்மைகளை ஏற்படுத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முயற்சிகளுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2015ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் பின்னர் இலங்கையில் பல்வேறு சாதக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரவித்துள்ளார்.
தேர்தல் நடைபெற்று 16 மாதங்களில் குறிப்பிடத்தக்களவு மாற்றங்கள் நாட்டில் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், நிலையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சியை ஏற்படுத்தவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் இன்னும் அரசாங்கம் பாரியளவு கருமங்களை ஆற்ற வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.