உத்தியோகபூர்வ ஆவணமொன்றை போலியாக தயாரித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட இலங்கையருக்கு டோஹா கட்டாரில் ஒரு வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
டோஹா கட்டாரிலுள்ள குற்றவியல் நீதிமன்றமே மேற்படி தீர்ப்பை வழங்கியுள்ளது. பொருளாதாரத் துறையில் பட்டம் பெற்றதாக தெரிவித்து குறித்த இலங்கையரினால் குறித்த ஆவணம் கட்டாரிலுள்ள அரச திணைக்களமொன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததன் பின்னணியிலேயே குறித்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் ஆராய்;ந்த நீதிமன்றம் குறித்த நபரை குற்றவாளியாக இனம் கண்டு மேற்படி தீர்ப்பை வழங்கியிருக்கின்றது.
குற்றவாளியை தண்டனைக்காலம் நிறைவடைந்ததன் பின்னர் இலங்கைக்கு நாடு கடத்துமாறும் நீதிமன்றம் தனது உத்தரவில் மேலும் குறிப்பிட்டுள்ளது.