சட்ட விரோதமாக நாட்டில் தங்கியிருந்த 41,000 பேரை குவைத் இதுவரை வௌியேற்றியுள்ளது. இவ்வாறு வௌியேற்றப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.
கடந்த 2015ஆம் ஆண்டு தொடக்கம் 2016ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்கள் வௌியேற்றப்பட்டுள்ளனர். கடந்த 2015ஆம் ஆண்டு 26,600 பேரும் 2016 ஆம் ஆண்டில் முதல் நான்கு மாதங்களில் 14,400 பேருமாக மொத்தம் 41,000 பேர் வௌியேற்றப்பட்டுள்ளனர்.
இவர்களில் வீசா காலாவதியானவர்கள், சட்ட விரோதமாக தங்கியிருந்தவர்கள் மற்றும் தொழிலாளர் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்தவர்கள் உள்ளடங்குகின்றனர். அண்மைக்காலமாக குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்போரை சிறையிலிடாமல் நாட்டை வௌியேற்றும் நடவடிக்கையை குவைத் வௌியேற்றி வருகின்றது.
இவ்வாறு அடையாளங்காணும் நபர்கள் அடையாளங்காணப்பட்டு ஒரு மாதத்தில் வௌியேற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.