Breaking
Thu. Nov 14th, 2024

தமது புகைப்படங்கள் அடங்கிய பேனர்கள், பதாகைகள், கட்அவுட்களை அகற்றுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

மே தினத்தை முன்னிட்டு கொழும்பு நகரின் பல பகுதிகளிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் புகைப்படம் அடங்கிய பேனர்கள், கட்அவுட்கள் மற்றும் பதாகைகள் பல காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இந்த அனைத்து பேனர்கள், கட்அவுட்களையும் அகற்றுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்ட ஏற்பாட்டாளர்களுக்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.

மே தினமன்று பிரதமரின் புகைப்படம் அடங்கிய பதாகைகள் பேனர்கள் ஆயிரக்கணக்கில் கட்சி ஆதரவாளர்களினால் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

தேர்தல் அல்லது அரசியல் நிகழ்வு ஒன்று அறிவிக்கப்படும் வரையில் கட்சிக் காரியாலயங்கள் தவிர்ந்த ஏனைய இடங்களில் தமது புகைப்படத்தை காட்சிப்படுத்த வேண்டாம் என பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

By

Related Post