Breaking
Mon. Dec 23rd, 2024

– வசீம் அக்ரம் –

புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் எச்.ஏ.பைகர் இலங்கை பாடசாலை உதைபந்தாட்ட சங்கத்தினால் கொரியா நாட்டிற்கு செல்ல தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சாஹிரா தேசிய கல்லூரியில் க.பொ.த. உயர்தர பிரிவு முதலாம் ஆண்டில் கல்வி பயின்று வரும் இவர் பாடசாலை மட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் தனது அதீத திறமையை வெளிகாட்டியமையினால் கொரியா ஜான்க்ஜியில் நடைபெறும் 44 வது ஆசிய பாடசாலைகள் உதைபந்தாட்ட சாம்பியன்சிப் சுற்றுப்போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றுக்கொண்டார்.

வரும் மே மாதம் 20ம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரை நடைபெறவிருக்கும் இச்சுற்றுபோட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றதன் மூலம் புத்தளம் சாஹிராவின் சாதனையை மீண்டும் பறைசாற்றுகிறார்.

இவர் புத்தளம் கால்ப்பந்தாட்ட லீக்கின் உப தலைவரும், புத்தளம் நியூ ஸ்டார்ஸ்  கழகத்தின் தலைவருமான எம்.ஐ. ஹலீம்தீன் மற்றும் ஐனுல் பர்ஹானா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வர் ஆவார்.

புத்தளம் கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டியில் நியு ஸ்டார்ஸ் கழகம் சார்பாக தனது முதலாவது போட்டியில் தனது கன்னி கோலினை பெற்றுகொண்டமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post