Breaking
Fri. Nov 22nd, 2024

இவ்­வ­ருடம் ஹஜ் கட­மையை நிறை­வேற்ற விண்­ணப்­பித்­த­வர்­களில் 50 வீத­மானோர் கட­மையை நிறை­வேற்­று­வதில் அக்­க­றை­யின்­றியும் விருப்­ப­மின்­றியும் இருக்­கின்­றனர்.

ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் தமது பய­ணத்தை எழுத்து மூலம் உறு­தி­செய்­யா­விட்டால் ஹஜ் பய­ணத்­துக்­கான வாய்ப்பு வழங்­கப்­ப­ட­மாட்­டா­தென ஹஜ் குழுவின் உறுப்­பி­னரும் முஸ்லிம் சம­ய­ வி­வ­கார மற்றும் தபால் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமின் பிரத்­தி­யேக செய­லா­ள­ரு­மான எம்.எச்.எம்.பாஹிம் தெரி­வித்தார்.

2016 ஆம் வரு­டத்­துக்­கான ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரி­விக்­கையில், இவ்­வ­ருடம் ஹஜ் கட­மையை மேற்­கொள்­வ­தற்கு 4500 பேர் விண்­ணப்­பித்­தி­ருக்­கி­றார்கள். இவர்­களில் 3000 பேருக்கு முஸ்லிம் சமய கலா­சார அலு­வல்கள் திணைக்­களம் பய­ணத்தை உறு­தி­செய்­யு­மாறு கடி­தங்­களை அனுப்­பி­வைத்­துள்ள போதிலும் பல வாரங்கள் கடந்தும் இது­வரை 50 வீத­மா­னோரே தமது பய­ணத்தை எழுத்து மூலம் உறுதி செய்­துள்­ளனர்.

ஹஜ் பய­ணத்­துக்கு விண்­ணப்­பித்த வரிசைக் கிர­மங்­க­ளுக்­கேற்­பவே தெரி­வுகள் இடம்­பெ­ற­வுள்­ளன.

முதல் 3000 விண்­ண­ப்ப­தா­ரிகள் கொண்ட தொகு­தியில் பய­ணத்தை உறுதி செய்­யாத பய­ணி­க­ளுக்குப் பதி­லாக ஏனைய விண்­ணப்­ப­தா­ரிகள் தெரி­வு­செய்­யப்­ப­டு­வார்கள்.

இறுதி நேரத்தில் ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் பய­ணத்தை உறுதி செய்­வ­தற்கு இட­ம­ளிக்­கப்­பட மாட்­டாது. அதனால் இவ்­வ­ருடம் ஹஜ் பய­ணத்தை மேற்­கொள்­ள­வுள்ள ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் உட­ன­டி­யாக தமது பய­ணத்தை திணைக்­க­ளத்­திடம் உறு­தி­செய்து கொள்ள வேண்டும்.

அநேக விண்­ணப்­ப­தா­ரிகள் திணைக்­க­ளத்தில் தமது பய­ணத்தை உறுதி செய்து கொள்­ளாது ஹஜ் முகவர் நிலை­யங்­களில் தம்மைப் பதிவு செய்து கொண்­டுள்­ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. திணைக்­க­ளத்தில் தமது பய­ணத்தை உறு­தி­செய்து கொண்­டுள்­ள­வர்­க­ளுக்கே ஹஜ் வாய்ப்பு வழங்­கப்­படும்.

திணைக்­களம் இதற்­கான கடி­தங்­களை முதல் 3000 விண்­ணப்­ப­தா­ரி­க­ளுக்கும் அனுப்பி வைத்­துள்­ளது.

ஹஜ் முக­வர்கள் நிய­மனம் தொடர்­பான நேர்­மு­கப்­ப­ரீட்சை கடந்த 2 ஆம் திகதி முதல் நடை­பெற்று வரு­கி­றது. இது எதிர்­வரும் 6 ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்­ளது.

இதே­வேளை சில ஹஜ் முக­வர்­களின் நிதி­மோ­சடி தொடர்­பான முறைப்­பா­டுகள் ஹஜ் கமிட்­டிக்குக் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன.

நிய­ம­னத்தின் போது இம்­மு­றை­ப்பா­டு­களும் ஏற்­க­னவே ஹஜ் பய­ணி­களின் முறைப்­பா­டு­களை விசா­ரணை செய்­வ­தற்­கென நிய­மிக்­கப்­பட்ட ஹஜ் விசா­ர­ணைக்­கு­ழுவின் அறிக்­கையும் கவனத்திற்கொள்ளப்படும் என்றார்.  (விடிவெள்ளி)

By

Related Post