ஹெலிகொப்டர் ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை கைது செய்யும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை என்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
ஹெலிகொப்டர் ஊழலை முன்வைத்து டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் சோனியா காந்திக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பங்கேற்று கெஜ்ரிவால் பேசியதாவது: ஹெலிகொப்டர் ஊழல் விவகாரத்தில் தொடர்புடைய காங்கிரஸ் கட்சியினரை காப்பாற்ற பா.ஜ.க. அரசு முயற்சிக்கிறது. அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஊழல் விவகாரம் தொடர்பாக மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2 ஆண்டுகாலமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காத்து வருகிறது.
சோனியா காந்தியைப் பார்த்து மோடி அச்சப்படுகிறார். அப்படி அச்சப்படாவிட்டால் ஹெலிகொப்டர் ஊழல் விவகாரத்தில் குற்றம்சாட்டப்படும் சோனியா காந்தியை கைது செய்யும் தைரியம் பிரதமருக்கு இருந்திருக்கும் என்றார்.