Breaking
Mon. Dec 23rd, 2024

ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்­ச­லு­கையை மீண் டும் பெற்றுக் கொள்­வது தொடர்பில் இலங்­கைக்கு மனித உரிமை விவ­காரம் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் 58 நிபந்­த­னை­களை ஐரோப்­பிய ஒன்­றியம் முன் ­வைத்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அந்­த­வ­கையில் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்­ச­லு­கையை மீண்டும் வழங்­கு­வது தொடர் பில் பரி­சீ­லனை செய்ய வேண்­டு­மாயின் இந்த நிபந்­த­னைகள் நிறை­வேற்­றப்­பட வேண்­டு­மென ஐரோப்­பிய ஒன்­றியம் வலி­யு­றுத்­தி­யுள்­ளதாக நம்­ப­க­ர­மாக தெரி­ய­வ­ரு­கி­றது. பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை நீக்­குதல்,

தடுத்து வைக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்­பான விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்­த­துதல், புதிய மனித உரிமை செயற்­பாட்டு திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­துதல், தடை செய்­யப்­பட்­டுள்ள புலம்­பெயர் அமைப்­புக்கள் மற்றும் தனிப்­பட்­ட­வர்கள் தொடர்­பான கொள்­கையை மீளாய்வு செய்ய புதிய அர­சி­ய­ல­மைப்பின் கீழ் அதி­கா­ரங்­களை பகிர்தல், வடக்கில் தனி­யார்­களின் காணிகள் அனைத்­தையும் உட­ன­டி­யாக மீளக் கைய­ளித்தல், தேசிய நல்­லி­ணக்கம் மற்றும் தேசிய மீள் குடி­யேற்றம் தொடர்­பான செயற்­பாட்­டிற்கு புதிய கொள்­கையை அறி­மு­கப்­ப­டுத்­துதல், இடம்­பெ­யர்ந்த அனைத்து மக்­க­ளையும் விரை­வாக குடி­யேற்­று­துதல், காணா­மல்­போனோர் தொடர்­பாக சான்­றிதழ் வழங்­குதல் உள்­ளிட்ட விட­யங்கள் குறித்த 58 நிபந்­த­னை­களில் இட­ம்­பெற்­றுள்ன.

அந்­த­வ­கையில் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்­ச­லு­கையை இலங்கை மீண்டும் பெற்­றுக்­கொள்­வது தொடர்பில் ஐரோப்­பிய ஒன்­றியம் பரி­சீ­லனை செய்ய வேண்­டு­மாயின் இந்த நிபந்­த­னைகள் நிறை­வேற்­றப்­பட வேண்­டு­மென ஐரோப்­பிய ஒன்­றியம் வலி­யு­றுத்­தி­யுள்­ள­தாக நம்­ப­க­ர­மாக தெரி­ய­வ­ரு­கி­றது.

இந்­நி­லையில் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் இந்த நிபந்­த­னைகள் வெளி­வி­வ­கார அமைச்­சினால் ஏற்றுக் கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­றது. அந்­த­வ­கையில் அடுத்த வாரம் பெல்­ஜி­யத்தின் தலை­ந­க­ரான பிரஸ்ஸல்ஸ் நகரில் இது தொடர்­பான பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெ­ற­வுள்­ள­தாக தக­வல்கள் தெரி­வித்­தன.

அதற்­காக இலங்­கையின் முக்­கிய பிர­தி­நிதி ஒருவர் தலை­மை­யி­லான தூதுக்­கு­ழு­வினர் இவ்­வாரம் பிரஸ்ஸல்ஸ் பய­ணிக்­க­வுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இதே­வேளை இந்த விட­யங்கள் தொடர்பில் முன்­னேற்­றங்­களை இலங்கை வெளிக்­காட்ட வேண்­டு­மென்றும் இலங்­கைக்­கான ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் தூதுவர் அர­சாங்­கத்­திற்கு அறி­வித்­துள்­ள­தா­கவும் ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இலங்­கைக்கு வழங்­கப்­பட்டு வந்த ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்­ச­லுகை சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் நிறுத்­தப்­பட்­டது. அதன்­பின்னர் இந்த வரிச்­ச­லு­கையை பெற்­றுக்­கொள்­வ­தற்கு அர­சாங்­கத்­தினால் பல முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டும் அவை பல­ன­ளிக்­க­வில்லை. அந்தவகையில் பதவிக்கு வந்த புதிய அரசாங்கம் மீண்டும் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை முன்னெடுத்தது.

இதேவேளை இலங்கையின் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான மீன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை அண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post